• vilasalnews@gmail.com

‘கிணற்றைக் காணோம்’ காமெடி புகழ் நடிகர் நெல்லை சிவா காலமானார்!

  • Share on

வள்ளியூர் வேப்பிலான்குளத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் நெல்லை சிவா அவர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.

சினிமா நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்று மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார். நெல்லைத் தமிழ் மூலம் பிரபலமான அவரின் நல்லடக்கம் நாளை 12.5.2021 நண்பகலில் அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

நெல்லை சிவா என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி,1952 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1985 இல் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார். மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

  • Share on

ஜெயம்ரவி மனைவியுடன் குடிபோதையில் தனுஷ் ரகளையா?

வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம்.. யாரென்று தெரிகிறதா ?

  • Share on