
பீப் சாங்கை விட பச்சையாக ஆபாச வார்த்தைகளால் உருவாக்கப்பட்டுள்ள "தூத்துக்குடி கொத்தனார்" பாடலை இன்றைய இளைஞர்கள் ஓபனாகவே கேட்கத் தொடங்கிவிட்டனர். மேலும், சோஷியல் மீடியாவில் பலர் அந்த ஆபாச பாடல் குறித்து எழுதவும் எடிட் வீடியோக்களை உருவாக்கி போட்டும் வருகின்றனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் படத்தின் புரமோஷனுக்கு அந்த பாடலை பயன்படுத்தி உள்ளனர்.
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என விஜய் டிவி சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் தான் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் இவரும் ஹீரோவாக மாறி உள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரியோ ராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், அந்த வரிசையில் ஸ்வீட் ஹார்ட் படம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் இணைந்து ஃபன் பண்ணும் மொட்டை மாடி பார்ட்டிக்கு யுவன் சங்கர் ராஜாவுடன் ரியோ ராஜும் பங்கேற்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
சமூக வலைதளங்கள் முழுவதும் ஆபாச பாடலான தூத்துக்குடி கொத்தனார் டிரெண்டாகி வரும் நிலையில், அதை வைத்து புதுவித புரமோஷனை செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஸ்வீட் ஹார்ட் படத்தில் பாடலாசிரியராக மாறியுள்ள ரியோ ராஜுக்கு தூத்துக்குடி கொத்தனார் வரிகளை விஜே சித்து கொடுக்க அடுத்த வரிகளாக நல்ல வீடு கட்டினார் என்று எழுதினார். பக்கத்துல பாம்பு வரிகளுக்கு அடுத்து என்னை மட்டும் நம்பு என்கிற வரிகளை எழுதினார். நீ ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதை என்றும் வரிகள் நீள.. யுவன் சங்கர் ராஜாவை வச்சு என்னடா ஃபன் பண்றீங்க என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் புரமோஷனுக்கு இப்படியா பண்ணுவீங்க என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.