• vilasalnews@gmail.com

அஜித்தின் விடாமுயற்சி... பார்க்க முயற்சிக்கலாமா? திரைவிமர்சனம்!

  • Share on

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) வெளியாகியுள்ளது. 


என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துடன் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி அமைத்துள்ளார். கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.


தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 திரைகளில் இப்படம் திரைக்கு வருகிறதாம். கடந்த ஞாயிறு அன்று இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல புக் மை ஷோ முன்பதிவு தளத்தில் முதல் நாளிலேயே 45 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விடாமுயற்சி திரைப்படம் சாதனை படைத்தது. 


இந்த நிலையில், விடாமுயற்சி படத்துக்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. படம் வெளியாகும் முதல் நாளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகளில் படத்தை திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.


விடாமுயற்சியில் அஜித்தின் இன்ட்ரோ வழக்கமான ஹீரோ என்ட்ரீ சினிமா தனமாக இல்லாமல் இயல்பாக காட்சியிருப்பது நன்றாக இருந்தது. முதல் பாதியில் அஜித் திரிஷா இடையே மலர்ந்த காதல் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் விதம், அஜித் திரிஷா போலவே மிக அழகாக இருந்தது. முதல் பாதி நல்லா இருக்கு அல்லது இரண்டாம் பாதி நல்லா இருக்கு என்று எதையாவது சொல்லக்கூட விடாத அளவிற்கு இரண்டு பாதியிலும் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது. சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகர்கிறது. 


அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடகர் அறிவு எழுதி ஆண்டனி தாசன் பாடிய ‘சவதீகா’ என்ற படத்தின் முதல் பாடல் ஒன்று மட்டுமே துள்ளல் போட வைக்கிறது. அஜர்பைஜான் லாண்ட்ஸ்கேப்-யை அத்தனை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் மாஸ்டரின் கார் சண்டைக் காட்சிகள் மட்டுமே படத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. 


வழக்கமான மாஸ் மசாலா படம் இது கிடையாது. ஹீரோ அஜித்குமாருக்கு ஒரு அறிமுக பாடல், மாஸ் வசனங்கள் எல்லாம் இல்லை. மாஸ் காட்சிகளை எதிர்பார்த்து வரும் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை அளிக்கலாம். அவ்வளவு சீக்கிரம் சண்டைக்கு போக மாட்டேன் என்கிறார் அஜித்குமார்.  ஆக் ஷன் காட்சிகள் சுமார் ரகம் தான். அர்ஜுன், ரெஜினா வருகை பின்பு தான் விறுவிறுப்பு என்று எதிர்பார்த்தாலும் இறுதியில் ஏமாற்றம் தான் போல என நொந்து கொள்ள வைக்கிறது.


கணவன் ( அஜித் ) , மனைவி ( திரிஷா ) இடையேயான பிரச்சனை, பிளாஷ்பேக், மனைவி ( திரிஷா ) கடத்தப்படுவது , மனைவியை தேடி கணவன் மீட்பது இது தான் ஒட்டு மொத்தமான விடா முயற்சி படம்


அஜித் ரசிகர்களால் மட்டுமே கொண்டாடி தீர்க்கும் படமாக விடாமுயற்சி அமையலாமே தவிர, மற்றவர்களும் கொண்டாடுவார்களா என்பது சந்தேகம் தான். ஆக அஜித்தின் விடாமுயற்சியை பார்க்க முயற்சித்து இருக்க வேண்டாமோ என்று படம் பார்த்தவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

  • Share on

ச்சீ ச்சீ பாடல் புகழ் ஹீரோ இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

எங்க தோக்குறமோ அந்த இடத்தில்தான் ஜெயிச்சு காட்டனும்.. வாடகைக்கு வீடு தராத ஊரில் சொந்த வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா!!

  • Share on