
‘ச்சீ ச்சீ’ பாடல், 1995ல் எழுதப்பட்டு 2005ல் வெளியானது. இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி, பிபூதி பிஸ்வாலை 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாக்கியது.
டிக்டாக் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வெற்றிடத்தை சற்று வித்தியாசமாக இன்ஸ்டாகிராம் நிரப்பியதைத் தொடர்ந்து, இது இன்ஸ்டாகிராம் காலமாக மாறிப்போனது. எந்த பாடல் எப்படி எங்கிருந்து எப்படி திடீரென டிரெண்டாகிறது என கண்டுபிடிக்க முடியாத யுகம் இது. அப்படி தான் அண்மையில் இன்ஸ்டாகிராம் தொடங்கி அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது ‘ச்சீ ச்சீ’ பாடல்.
புரியாத மொழி, இருப்பினும் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘ச்சீ ச்சீ’ என தொடங்கும் என்ற இந்த ஒடிசா மொழி பாடலுக்கு பலரும் நடனமாடி அதனை ரீல்ஸ்களாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த ச்சீ ச்சீ பாடலுக்கு தமிழ் அர்த்தையும் நம்ம ஆட்கள் சல்லடைப்போட்டு தேடி அதை பாடியும் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
ச்சீ ச்சீ பாடல் ஒரு காதல் தோல்வி பாடல். காதலியை நினைத்து காதலன் பாடும் இந்தப் பாடல் ஒடிசாவின் ‘பலிபுல்’ (Baliphul) என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர் பிபூதி பிஸ்வால்.
இந்த பாடல் கடந்த 1995 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஆனால், 2005 ஆம் ஆண்டு தான் படமாக்கப்பட்டது. இந்த பாடலை படமாக்க 10 ஆண்டுகளுக்கு பிறகே முயற்சி செய்துள்ளனர்.
இந்த பாடலில் ஒடியாவின் பிரபல நாடக நடிகர் பிபூதி பிஸ்வால் நடித்துள்ளார். இந்த பாடல் 2005ஆம் ஆண்டு வெளியான போது கிடைத்த வெற்றியை விட தற்போது வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிபூதி பிஸ்வால் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து அவர் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் தனது பாடல் தற்போது டிரெண்டிங்கில் இருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.