• vilasalnews@gmail.com

50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த பிரபல நடிகர் படம் .!!!

  • Share on

தெலுங்கில் விஜய்சேதுபதியின் உப்பென்னா படம் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் சினிமா உச்சத்திற்கு போய்க்கொண்டு இருக்கின்றன. அதற்கு காரணம் பவானி என்ற ஒற்றை கதாபாத்திரம் தான். ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதிதான் அனைவருக்கும் பிடித்திருக்கிறதாம்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு அதிரடியான வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உப்பென்னா. மகளின் காதலை எதிர்க்கும் கௌரவ தந்தையாக ராயணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.


தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அந்தவகையில் மீண்டும் ஒரு வாரிசு நடிகராக சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வைஷ்ணவ் தேஜ்.

பிப்ரவரி 12ஆம் தேதி வெளிவந்த மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதியின் ராயணம் கதாபாத்திரம் தான் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் புகழ் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. 


  • Share on

சிலரின் செயல்கள் என்னை வருத்தமடைய செய்கிறது” - நடிகர் அஜித் அறிக்கை

ஜெயம்ரவி மனைவியுடன் குடிபோதையில் தனுஷ் ரகளையா?

  • Share on