
இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரிலீஸ் செய்யப்பட்ட இருக்கிறது. இந்த பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், கைகள் நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆனது என்று கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக வந்தார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.
இவர் 12 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா படம் தற்போது ரிலீஸ் ஆகிறது. மதகஜராஜா படத்தில், நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. 2013ஆம் ஆண்டில் இந்த படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் தான் மிக நீண்ட தாமதத்திற்கு பிறகு அதாவது கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து வரும் பொங்கலுக்கு களம் இறங்குகிறது.
அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டு மேடையில் ஏறி பேசும்போது அவரை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள். அவர் மேடையில் நடுங்கிக்கொண்டே பேசியது பார்த்து பலரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
அவருக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். விஷால் கடும் காய்ச்சல் இருக்கும் நிலையில் இன்று நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு இப்படி நடந்து இருக்கிறது. அவர் உடல்நிலையை கவனிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.