சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு வந்த ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளுடன் வந்ததோடு, மைதானத்தில் முழக்கமிட்டதால் அறிக்கை வாயிலாக நடிகர் அஜித் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
வலிமை படம் முன்னரே அறிவித்தப்படி செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருந்தால் தான் சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு வந்த ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளுடன் வந்ததோடு, மைதானத்தில் முழக்கமிட்டனர். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர்.