நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த தமிழ் படத்துக்கு சர்வதேச விருது
நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பி.எஸ் வினோத் ராஜ் இயக்கிய 'கூலாங்கள்' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இது குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவு பற்றிய கதை. 'கூலாங்கல்'
முன்பு நடிகை நயன்தாரா பேசுகையில், இப்படதலைப்பு மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம் என்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, கூலாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிட தேர்வானது. இதற்காக படக்குழுவினருடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்று இருந்தனர்.
அங்கு படம் திரையிடப்பட்டு உயரிய டைகர் விருதை பெற்றுள்ளது. ரோட்டர்டம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017இல் சனல் குமார் சசிதரன் இயற்றிய செக்ஸி துர்கா என்ற மலையாள படத்துக்கு இந்த விருது கிடைத்தது. குறிப்பிடத்தக்கது.