நடிகைகள் பொதுவாக ஐந்து வருடத்தில் ஹீரோயின் அந்தஸ்தை இழந்து விடுவார்கள். 5 வருடங்கள் நடித்த பிறகு அவர்களுக்கு எப்படியும் மார்க்கெட் போய்விடும். ஆனார், 10 முதல் 15 வருடங்கள் வரை ஸ்டார் அந்தஸ்து குறையாமல் ஜெயித்த ஆறு நடிகைகள் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?
ஸ்ரீதேவி
1963 ல் பிறந்தவர் நான்கு வயதில் நடிக்க வந்து விட்டார். 1967 சிவாஜியின் கந்தன் கருணை படத்தில் முருக கடவுளாக நடித்தார். பின்னர் 1971 ல் மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து 1986 ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை படம் வரை ஹீரோயின் ஆக மட்டுமே நடித்து 15 வருடங்கள் ஹீரோயினாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார்.
மீனா
எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தார். அதன் பின் அவருக்கே ஜோடியாகவும் நடித்து அசத்தினார். 1990 ல் ஒரு புதிய கதை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இன்று அண்ணாத்த படம் வரை அந்தஸ்து குறையாமல் நடித்து வருகிறார்.
சிம்ரன்
1997 ல் விஐபி படம் மூலம் அறிமுகமான இவர் 2005 கிச்சா வயசு 16 படம் வரை ஹீரோயின் அந்தஸ்து குறையாமல் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நடித்து வந்தார். இப்பொழுது ரிலீசாக உள்ள அந்தகன் படத்தில் கூட ஹீரோயின் ரேஞ்சுக்கு குறையாமல் நடித்திருக்கிறார்.
ஜோதிகா
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்து 2021 உடன்பிறப்பே வரை ஹீரோயின் அந்தஸ்தில் நடித்து வருகிறார். இப்பொழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் வயதான கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிக்கிறார்.
நயன்தாரா மற்றும் திரிஷா
லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக இன்றுவரை குழாயடி சண்டை போல் இவர்களது பஞ்சாயத்து முடிந்த பாடு இல்லை. 15 வருடத்திற்கு மேல் இரண்டு பேரும் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.