நடிகர் அஜித்குமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பைக் பயணம் மேற்கொண்டு வீடு திரும்பிட்டுள்ளார்
நடிகர் அஜித்குமார் நீண்ட தூரம் பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவர். இவர் சில வாரங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வடமாநிலங்களில் இரு சக்கர வாகன பயணத்தை தொடங்கினார்.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பின்னர்,அங்கிருந்து சாரநாத் வாரநாசி பகுதிக்கு சென்றடைந்தார்.
வாரணாசியில் தெரு ஓரத்தில் இருந்த ஒரு சாட் மசாலா கடைக்கு சென்று உணவு சாப்பிட்ட பின் அச்சாலையில் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் அவருடைய மகன் படிப்பு செலவை ஏற்றதாகவும் தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து பயணம் செய்தபோது வழியில் அஜித்தை அடையாளம் கண்டவர்கள் அவர் உடன் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
தற்போது பயணத்தை முடித்துவிட்டு திரும்பி உள்ள அவர் சென்னை_கோவை_சென்னை _ஐதராபாத் _வாரணாசி_காங்டாக் _லக்னோ _அயோத்யா_ ஹைதராபாத் _சென்னை என்று பத்தாயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பயணித்து அஜித்குமார் முடித்துவிட்டதாக உடன் பயணித்தவர்கள் வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.