• vilasalnews@gmail.com

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதியளித்த நடிகர் தனுஷ்!

  • Share on

கமல்ஹாசன், விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட பணிகள் பல மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கிய சூழலில் தொடர்ந்து இந்த கட்டிட பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் 40 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக சங்கத்தின் சார்பில் தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது. வங்கியில் கடன் பெற உள்ளதாக சமீபத்தில் நடந்த இந்த சங்கத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் தொடர்ந்து இந்த சங்க கட்டிட பணிகளுக்காக நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தென்னிந்திய சங்க கட்டிடப் பணிகளுக்காக தற்போது ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். நடிகர் நாசரை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை அவர் வழங்கியுள்ளார். இதையடுத்து அவருக்கு சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய், நெப்போலியன் ஆகியோர் கட்டிடப் பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். இந்த ஆண்டுக்குள் இந்த கட்டிடப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யவுள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி நடிகர்கள் தொடர்ந்து கட்டிட பணிகளுக்காக நிதி வழங்கி வருவது வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி பற்றாக்குறையால் இடையில் சில காலங்கள் இந்த கட்டிடப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட சூழலில் தற்போது இந்த பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த கட்டிடத்தில் ஆடிட்டோரியம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிரவுண்ட் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த ஆடிட்டோரியத்தில் தொடர்ந்து சினிமா தொடர்பான அவார்ட் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இதனிடையே, 800 பேர் அமரக்கூடிய வகையில் மேரேஜ் ஹாலும் 300 பேர் அமரக்கூடிய வகையில் மினி ஹாலும் இங்கு கட்டப்பட உள்ளன. மிக பிரம்மாண்டமான பார்க்கிங் வசதியுடன் இந்த ஹால்கள் கட்டப்பட உள்ள சூழலில் சங்க உறுப்பினர்களுக்கு இந்த ஹால் இலவசமாக அவர்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்படும் என்று சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பைசன் காளமாடன் - புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

10 முதல் 15 வருடங்கள் வரை ஸ்டார் அந்தஸ்து குறையாமல் ஜெயித்த நடிகைகள் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

  • Share on