• vilasalnews@gmail.com

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படக்குழு... அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி தெரியுமா?

  • Share on

லைகா நிறுவனம் ஒவ்வொரு படத்துக்கும் அப்டேட் கொடுக்கும் போதெல்லாம் ஓடி வந்து பார்த்து ஏமாந்து போவதே வாடிக்கையாக நடந்து வந்தாலும் அஜித் ரசிகர்கள் பொறுமையாக இந்த முறை மகிழ் திருமேனி மிகப்பெரிய சம்பவத்தை அஜித் குமாரை வைத்து செய்வார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஊருக்கே தெரிந்த காஸ்டிங் அப்டேட்டை கூட இதுவரை லைகா அறிவிக்கவில்லை. அஜித் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றே கூறுகின்றனர். புத்தாண்டு, பொங்கல் என விஜய்யின் தி கிரெட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வரும் போது அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக்கையாவது விடுங்களேன் என அஜித் ரசிகர்கள் வி வான்ட் விடாமுயற்சி அப்டேட் ஹாஷ்டேக்கை கடந்த ஒரு வருடமாக டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், மார்ச் மாதத்துக்குள் படம் முடிந்து ரிலீஸ் தேதி வரை லாக் செய்து விட்டனர் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர், சிபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் தியேட்டர் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி என தூள் கிளப்பியது. போன பொங்கல் முதல் இந்த பொங்கல் வரை அடுத்த ஒரு வருடத்தில் அஜித்தின் அடுத்த படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அப்டேட் மட்டுமே ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். வில்லனாக அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என போட்டோக்கள் வரை வெளியான நிலையிலும் அதிகாரப்பூர்வமாக விடாமுயற்சி படத்தின் ஆன்போர்ட் அறிவிப்பை கூட லைகா வெளியிடவில்லை.

இந்நிலையில், மார்ச் மாதமே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை அஜர்பைஜானில் முடித்து விட மகிழ் திருமேனி முடிவு செய்திருப்பதாகவும் முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவாகும் படமாக விடாமுயற்சி இருக்கும் நிலையில், பான் இந்தியா ரிலீஸ் பிளானையும் லைகா நிறுவனம் பிளான் பண்ணி உள்ளதாக கூறுகின்றனர். வரும் ஏப்ரல் 26ம் தேதி அல்லது மே 1ம் தேதி இரு தேதிகளை இதுவரை லாக் செய்து வைத்திருப்பதாகவும் ஷூட்டிங் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு புரமோஷன் பணிகளை ஆரம்பிப்பார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஷூட்டிங் விடிய விடிய நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share on

விஜயகாந்துக்கு என்ன நடந்தது? மரணத்தில் மர்மம் இருக்கு...பகீர் கிளப்பிய மன்சூர் அலிகான்!

திரைவிமர்சனம் : கலவையான விமர்சனத்தில் ' ரத்னம் ' - படம் எப்படி இருக்கு?

  • Share on