• vilasalnews@gmail.com

விஜயகாந்த்தை பார்த்து விஜய் அழ இதுதான் காரணம்.. மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

  • Share on

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விஜய் வந்தார். அப்போது விஜயகாந்த்தின் உடலை சில நொடிகள் பார்த்தவாறு நின்ற அவர் சட்டென கண் கலங்கினார். அது அங்கிருப்பவர்களை உருக செய்தது. இந்த சூழலில் அதுகுறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

விஜயகாந்த் உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழநாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நம்மில் ஒருவரை இழந்துவிட்டோமே என சாமானியர்கள் கண் கலங்கினார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதற்கிடையே விஜயகாந்த் இறந்த அன்று நள்ளிரவு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார் விஜய். வந்து விஜயகாந்த்தின் உடலை சில நொடிகள் பார்த்தவாறு நின்றுகொண்டே இருந்தார். அப்போது சட்டென கண்களும் கலங்கிவிட்டார். அது அங்கிருந்த பலரையும் உருக செய்தது. மேலும் விஜயகாந்த் மீது விஜய்க்கு எவ்வளவு பாசமும், நன்றியும் இருக்கிறது ரசிகர்களும் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும், அவரை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசினார். அந்தப் பேட்டியில் அவர், "விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் ஒழுங்காக அஞ்சலி செலுத்தாதது நடிகர் சங்கத்துக்குத்தான் அசிங்கமே ஒழிய விஜயகாந்த்துக்கு துளிக்கூட அசிங்கம் இல்லை. அவர் சண்டை போடும்போது மட்டும்தான் 20 பேரை அடித்தாலும் நம்பும்படியாக இருக்கும். ஏனெனில் அவரது உடல் அமைப்பு அப்படி.

விஜயகாந்த் உடலை பார்த்து விஜய் கண் கலங்கியதற்கு காரணம் நன்றி விசுவாசம்தான். நாம் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் அவரும் ஒருவராக இருந்திருக்கிறாரே என நினைத்தால் போதும். அதுதான் கண்களில் கண்ணீராக வந்து அஞ்சலி செலுத்த வைக்கும்" என்றார்.

விஜய் அவருடைய கரியரின் ஆரம்பத்தில் தவித்துக்கொண்டிருக்கும்போது விஜயகாந்த் பீக்கில் இருந்தார். எனவே அவர் விஜய்யுடன் நடித்தால் விஜய்க்கு பிரபல்யம் கிடைக்கும் என்று நினைத்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்திடம் கேட்க; அவரும் ஒத்துக்கொண்டு நடித்தார். .அதனாலேயே அந்தப் படம் பல நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

நடிகை நயன்தாரா மீது போலீசார் வழக்குப்பதிவு

தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனப்பெருங்குடிகளின் பேராதரவுடன் 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்!

  • Share on