வடிவேலுவின் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான விஜயகாந்த்தின் மரணத்துக்கு நேரில் வரவில்லை வடிவேலு. சரி நேரில் வந்தால்தான் பிரச்னை; இரங்கல் தெரிவிப்பார் என்று நினைத்தால் அதனையும் அவர் செய்யவில்லை. இதனால் அவருக்கு எதிராக பலரும் திரும்பியிருக்கின்ற்னார். வடிவேலு மாதிரி நன்றி கெட்டவர் யாரும் இல்லை என பலரும் ஓபனாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் கலைஞர் 100 விழா திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேலு உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு உரையாற்றினார். ஸ்டாலின் கிளம்பியதும் ஒவ்வொருவராக கிளம்ப தொடங்கினர். அப்போது அவர்கள் அரங்கிலிருந்து தங்களது கார்வரை செல்வதற்கு வசதியாக பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டன.
அப்போது வடிவேலுவுக்காக நின்ற காரில் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தனது குடும்பத்தினருடன் ஏறிக்கொண்டார். அதனை கவனித்த அங்கிருந்தவர்கள், இது வடிவேலுவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்று சொன்னார்கள். அதற்கு சிவமணியோ, 'அவன்லாம் ஒரு ஆளா' என ஒரே போடாக போட்டு காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். அதனையடுத்து அடுத்து வந்த காரில் வடிவேலு அமர; பார்த்திபன் ஏறி பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார். அந்த சமயத்திலும் வடிவேலுவிடம், நீங்கள் பின்னால் வரும் காரில் வாருங்களேன் என சிலர் சொல்ல அதை ஏற்றுக்கொண்ட அவர் இறங்கி அடுத்து வந்த காரில் அமர்ந்து சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் வடிவேலு மூத்த கலைஞர்களில் ஒருவர். மேலும் திரையுலகினர் மத்தியில் மதிப்புடன் இருந்தவர். ஆனால் கலைஞர் 100 விழாவில் அவர் இப்படி நடத்தப்பட்டதை பார்த்த ரசிகர்கள், வடிவேலுவுக்கு இது தேவைதான். தன்னை வளர்த்துவிட்டவர்களை அவமானப்படுத்தினால் இந்த மாதிரிதான் நடக்கும். விஜயகாந்த்தின் சாபம் கண்டிப்பாக அவரை துரத்திக்கொண்டே இருக்கும். இனியாவது வடிவேலு தனது தவறை புரிந்துகொண்டு தலைக்கனத்தோடு நடக்கக்கூடாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.