• vilasalnews@gmail.com

விஜயகாந்த் பற்றி நேற்று பேச கூட மறுத்து அடம் பிடித்தார்; ஆனால் இன்று... அரசியல்வாதிகளையே மிஞ்சும் வகையில் ஸ்டண்ட் அடிக்கும் நடிகை!

  • Share on

விஜயகாந்த் மரணம் பற்றி பேசமாட்டேன், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டது பற்றி பேசமாட்டேன் என நேற்றைய தினம் பிடிவாதம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திடீரென இன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி அரசியல்வாதிகளையே மிஞ்சும் வகையில் ஸ்டண்ட் அடித்திருக்கிறார்.

சென்னையில் பிரபல  கடை ஒன்றை நேற்று திறந்து வைக்கச் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், விஜயகாந்தின் மரணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கடை திறப்பு விழா பற்றி மட்டும் தன்னிடம் கேள்விகள் கேட்குமாறு கூறினார். இருப்பினும் செய்தியாளர்கள் விடாமல் மீண்டும் கேள்வி எழுப்பியதை அடுத்து, விஜயகாந்த் மரணம் வருத்தம் தருவதாகவும் தாம் ஊரில் இல்லை என்றும் புதுச்சேரியில் இருந்ததால் தன்னால் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை எனவும் காரணம் கூறினார்.

புதுச்சேரிக்கும் சென்னைக்கும் 3மணி நேர பயணத்தில் வந்துவிட முடியும் என்பதை கூட உணராமல் தாம் ஏதோ வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததை போல் நான் ஊரில் இல்லை என சிம்பிளாக கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, ''நான் இப்போது தமிழில் தானே சொன்னேன், கடை திறப்பு விழா பற்றிய கேள்விகளை மட்டும் கேட்குமாறு'' என்று கடுகடுத்தார்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்கும் விவகாரத்தில் எல்லோருடைய கருத்துத் தான் தனது கருத்து என பொத்தாம் பொதுவாக கூறினாரே தவிர, விஜயகாந்த் பெயரை தான் வைக்க வேண்டும் என அவர் கூறவில்லை. இந்த நிகழ்வு நடந்தது நேற்று. இந்நிலையில் தான் இன்று சென்னை கோயம்பேட்டியில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவர் குறித்து, ரொம்ப நல்லவர், ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் உருக்கமுடன் பேசியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

  • Share on

விஜய்க்கு அன்று மறுத்த சினேகா... இன்று அவரை தேடி வந்துள்ளது - கணவர் பிரசன்னா ஓபன் டாக்!

விஜயகாந்த் சமாதியில் நடிகர் புகழ் எடுத்த சபதம்... குவியும் பாராட்டுக்கள்!

  • Share on