• vilasalnews@gmail.com

விஜய்க்கு அன்று மறுத்த சினேகா... இன்று அவரை தேடி வந்துள்ளது - கணவர் பிரசன்னா ஓபன் டாக்!

  • Share on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சமீபத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் அதாவது சுருக்கமாக கோட் என்கிற பெயர் வரும் விதமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வசீகரா திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்த சினேகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டார் சினேகா.

அப்போது பேசிய சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா,  இதற்கு முன்னதாக வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக நடிப்பதற்கு சினேகாவிற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சினேகா மறுத்துவிட்டார். அது நல்ல முடிவு என்று நான் அப்போதே பாராட்டினேன். அப்போது அந்த முடிவை எடுத்ததால்தான், இப்போது விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.

  • Share on

விஜயகாந்த் இறந்தால் என்ன? வெளியான வீடியோவால் அஜித்தை தாக்க ஆரம்பித்த நெட்டிசன்கள்!

விஜயகாந்த் பற்றி நேற்று பேச கூட மறுத்து அடம் பிடித்தார்; ஆனால் இன்று... அரசியல்வாதிகளையே மிஞ்சும் வகையில் ஸ்டண்ட் அடிக்கும் நடிகை!

  • Share on