• vilasalnews@gmail.com

விஜயகாந்த் இறந்தால் என்ன? வெளியான வீடியோவால் அஜித்தை தாக்க ஆரம்பித்த நெட்டிசன்கள்!

  • Share on

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங் இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்டன. தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் அஜித் புத்தாண்டு தினத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து அஜித்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அஜித்தின் ஏகே 62 திரைப்படம், விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் விடாமுயற்சி மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, துபாயில் தனது குடும்பத்தினருடன் ரவுண்டு அடித்து வரும் அஜித். நியூ இயர், மகள் அனோஸ்கா பிறந்தநாள் என இரண்டையும் அஜித் துபாயில் கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், சொகுசு கப்பலில் தனது குடும்பத்தினருடன் ரவுண்ட் அடித்த அஜித், மாடல் அழகியுடன் குத்தாட்டம் போட்டு அசத்தினார்.


இந்த நிலையில், தமிழ்த் திரையுலகில் பல மாற்றங்களை செய்து காட்டியவர் விஜயகாந்த். அதேபோல் நடிகர் சங்கத் தலைவராகவும் விஜயகாந்த் செய்தது கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படியிருக்கும் போது அவருக்காக அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாமே? இதுபோன்ற துக்க நிகழ்வுகளிலும் அஜித் இப்படி பங்கேற்காமல் இருக்கலாமா என விமர்சனங்கள் இருக்கக்கூடிய நிலையில், துபாயில் இருக்கும் அஜித் புத்தாண்டு தினத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அஜித்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Share on

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்.. அதிர்ச்சியை கிளப்பிய ஷீலா ராஜ்குமார்!

விஜய்க்கு அன்று மறுத்த சினேகா... இன்று அவரை தேடி வந்துள்ளது - கணவர் பிரசன்னா ஓபன் டாக்!

  • Share on