திரெளபதி, மண்டேலா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
நடிப்பு பட்டறையை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை இவர் திருமணம் செய்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சியளித்தனர்.
இந்நிலையில், இன்னொரு பிரபல தமிழ் சினிமா நடிகையும் தற்போது தனது விவாகரத்தை அதிரடியாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.