தமிழ் திரையுலகின் பிரபல நடிகை நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் 3.4 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரை அவரது 39வது பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றுள்ளார்.
சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, பாக்யராஜ்-பூர்ணிமா, அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் என இப்படி நிஜ வாழ்க்கையிலும் இணைந்த பிரபலங்களின் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த லிஸ்டில் இணைந்த முக்கியமான பிரபலங்கள் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களின் காதல் நானும் ரவுடித்தான் படப்பிடிப்பில் தொடங்கி இப்போது திருமணம், குழந்தைகள் என வந்துள்ளது.
நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கடந்த 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு பிறந்த நாள் பரிசாக மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதன் விலை ரூ. 2.60 கோடியிலிருந்து ரூ. 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் தொடர்பான புகைப்படத்தை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காரை பரிசாக பெற்ற நயன்தாரா ‘WELCOME HOME YOU BEAUTY’ என்று தனது கணவரை டேக் செய்துள்ளார். மேலும் "இந்த அன்பு பிறந்தநாள் பரிசுக்கு நன்றி" என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.