லியோ படத்தில் த்ரிஷாவுடன் ரேப் சீன் இல்லையென்று மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சர்ச்சையா ? அல்லது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறதா? என்பதை பார்ப்போம். வாருங்கள்.
லியோ படத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொதுவாக மன்சூர் அலிகான் ஆரம்ப கட்டத்திலிருந்தே வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார்.
பழைய படங்களில் அவருக்கு பெரும்பாலும் பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை குற்றம் புரிவது, கடத்தல், சட்டவிரோத விஷயங்களை செய்து போன்ற வில்லன் கதாபாத்திரங்களே அமைவது வழக்கம்.
இந்த நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடிக்கிறார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவும் செய்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து எதிர்ப்புகளும், சிக்கல்களும் மன்சூர் அலிகானுக்கு வந்தாலும் அவர் இதுவரை மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. மாறாக என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றே பேசி வருகிறார்.
ஆனால், ரேப் சீன் இருந்திருக்கலாம் என்று மன்சூர் அலி கான் பேசியது பெண்ணியத்தை கேவலப்படுத்தும் பேச்சு என்றால் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இடம்பெற்ற ரேப் சீன்களெல்லாம் பெண்ணியத்தை கெளரவப்படுத்தும் செயலா ?
ஆபாச உடைகளோடு கவர்ச்சியோடு உடலை காட்டி நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் போது கெட்டுப்போகாத மானமும் பெண்ணியமும், ரேப் சீன் இருந்திருக்கலாம் என்று மன்சூர் அலி கான் பேசிய உடன் கெட்டு போய்விட்டதோ ? என ஒரு தரப்பினர் கேட்டு வருகின்றனர்.
மன்சூர் அலி கான் எப்பொழுதும் யதார்த்தமாக இயல்பாக பேசுவது அவரது வழக்கம். இன்று மன்சூர் அலிகான் பெண்ணியத்தை கேவலப்படுத்தும் விதமாக பேசிவிட்டார் என தாம் தூம் குதிக்கும் பெண்ணுரிமை போராளிகளும், காவலர்களும் சற்று பின் நோக்கி, லியோ சக்ஸர் மீட் நிகழ்ச்சியில் மன்சூர் அலி கான் பேசியதை ஒரு முறை பார்த்து விட்டு வாருங்கள்.
லியோ சக்ஸர் மீட் விழாவில் இதே மன்சூர் அலிகான் பேசும் போது,
த்ரிஷா மேடம் கூட நடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை. த்ரிஷா நடிக்கிறாங்கனு உடனேயே நான் ஒத்துக்கொண்டேன். ஆஹா லோகேஷ் கனகராஜ் நம்ம ஹீரோயினி, அது இது, நாம வழக்கம் போல துரத்துவோம் கொள்ளுவோம் அப்படியெல்லாம் நினைச்சேன் ஆனா கிட்டவே நெருங்க விடவில்லை. பிளைட்லயே கூப்பிட்டு போயிட்டு பிளைட்லயே கூப்பிட்டு வந்துட்டாங்க.
அப்புறம் சரி அதுதான் கிடைக்க வில்லை. மடோனா பாப்பாவாவது கிடைக்குமானு பார்த்தேன். செட்டுகுள்ள வந்தாங்க, எனக்கு பயங்கர ஹேப்பி, ஆஹா மடோனா இருக்காங்கப்பா, நாம ஏதாவது ஹாலியா விளையாடலாம்னு பார்த்தா, அவங்க தங்கச்சி ரோல் ஆகிட்டாங்க. என மன்சூர் பேசினார்.
இந்த பேச்சை கேட்ட திரிஷா, மடோனா உட்பட அரங்கமே சிரித்து அதிர்ந்தது. இதையே தான் இப்பொழுது செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் மீண்டும் பேசியுள்ளார். ஆனால் தற்போது மன்சூர் அலிகான் பேச்சு சர்ச்சையாகி போனது எப்படி?
நடிகராக சில படங்களில் தோன்றி சிம்புவின் ரசிகராக அடையாளப்பட்டு தற்போது பிக்பாஸி சீசன் 7ல் கலந்துகொண்டிருக்கும் கூல் சுரேஷ்; மன்சூர் அலிகானின் சரக்கு பட விழாவில் பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு மாலையை போட்டுவிட்டார்.
அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கலங்கியபடி மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமின்றி அந்த விழாவிலேயே தொகுப்பாளினியிடம் மன்னிப்பு கேட்கும்படி மன்சூர் அலிகான் கூல் சுரேஷை வலியுறுத்தினார்.
பெண்கள் மீது மன்சூர் அலிகான் கொண்டிருக்கும் மதிப்பிற்கு இது ஒன்றே சாட்சி போதும். ஆகவே,மன்சூர் அலிகானின் பேச்சை, இது ஒரு சினிமாதனமான நகைச்சுவை பேச்சாக கடந்து போவதை விட்டு, மன்சூர் அலிகானின் பேச்சு பெண்கள் மீது வன்மத்தை கொட்டுவதாக பார்க்க முடிகிறது. அவரின் கேவலமான எண்ணத்தை பிரதிபலிக்கிறது. கண்ணியம் குறைவாக அவரது பேச்சு உள்ளது என கம்பு சுத்தி குதிப்பதை நிறுத்தி விட்டு, நாட்டுல எவ்வளவோ மக்கள் பிரச்சை இருக்கு அதை பற்றி பேச ஆரம்பியுங்கள். அதனால் நாடும் நன்றாக இருக்கும் நீங்களும் நன்றாக இருப்பீர்கள்.