• vilasalnews@gmail.com

இசை அமைப்பாளருக்கு சிவகார்த்திகேயன் வெளியில் சொல்ல முடியாத செய்ய துரோகம் என்ன?

  • Share on

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் இசை அமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.

2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு இமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற "ஊதா கலர் ரிப்பன்" உள்ளிட்ட அனைத்து பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றனர். சீமராஜா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இமான் கூட்டணி மீண்டும் இணையவில்லை.

இந்தநிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் இசையமைப்பாளர் இமான் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம் அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே, எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஒரு ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. இந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன். இதுகுறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கு அவரது பதிலை என்னால் வெளியே சொல்ல முடியாது. இதை மேலும் பெரிய விவகாரமாக ஆக்க விரும்பவில்லை. காரணம், என் குழந்தைகளின் எதிர்காலம் தான் இவ்வாறு இமான் கூறினார்.

  • Share on

தீபாவளிக்கு வரும் 3 படங்கள்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக பொங்குகிறவர்கள் இந்த பக்கம் வாங்க!

  • Share on