படப்பிடிப்பில் பங்கேற்க வந்த போது, தன்னை காண சாலையில் காத்திருந்த ரசிகர்களை கண்ட நடிகர் ரஜினிகாந்த் காரை நிறுத்தி கையசைத்து சென்றார்.
ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நெல்லை பனக்குடி பகுதியில் உள்ள ஓடு தொழிற்சாலை ஒன்றில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி காரில் வந்தபோது அவரைக் காண ரசிகர்கள் சாலையில் காத்திருந்தனர். அப்போது ரசிகர்கள் காத்திருப்பதை பார்த்த ரஜினி, காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி ரசிகர்களுக்கு காட்சியளித்து கையசைத்து சென்றார்.