பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஈஷா குப்தா. 2012 - ஆம் ஆண்டில் வெளியான ஜன்னல் 2 படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்த ஈஷா குப்தா, சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஈஷா குப்தா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை கூறியுள்ளார்.
அதில் அவர், சில இயக்குநர்கள் என்னிடம் ஒருமுறை அல்ல இரண்டு முறை அட்ஜெஸ்மெண்ட் பண்ண சொல்லி கேட்டார்கள் ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.
இதனால் அந்த படத்தின் ஷூட்டிங் உள்ளே நுழைய தடை விதித்தார்கள். அதன் பின்னர் என்னைப் பற்றி பொய்யான கதைகள் பரப்பப்பட்டது. இதனால் பட வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று ஈஷா குப்தா கூறியுள்ளார்.