• vilasalnews@gmail.com

மீண்டும்... நீண்ட இடைவெளிக்கு பிறகு சீரியலுக்கு வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன்

  • Share on

பிரபல சினிமா நடிகையான ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரையிலும் வம்சம், தங்கம் போன்ற பல அதிரடியான ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், அதன்பின் சீரியலில் கமிட்டாகாத அவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 

சமீபத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக இவர் தங்கம், கலசம், ராஜகுமாரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரான நள தமயந்தி தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதற்கான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

நள தமயந்தி தொடரின் முன்னோட்டக் காட்சியில் அம்மன் வேடத்தில் வருகிறார் ரம்யா கிருஷ்ணன். தொடரின் பிரமோஷனுக்காக நடிக்கிறாரா அல்லது சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்பது இனி வரும் நாள்களில் தெரியவரும்.

  • Share on

தூத்துக்குடியில் நடிகர் விஷால் ஷூட்டிங்

சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது - ஈஷா குப்தா

  • Share on