விடுதலை முதல் பாகம் படத்தின் வெற்றியை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை சூரி வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், 'அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி.
விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொதுமக்கள், சமூக வலைத்தள நண்பர்கள், அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என சூரி கூறியுள்ளார்.