• vilasalnews@gmail.com

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள மாறா படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது

  • Share on

ஜனவரி 8 ஆம் தேதி அன்று மாறா படம் ஓடிடியில் வெளியாகிறது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் பல படங்கள் ஓடிடியில் ரிலிஸ் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்கள் ரிலீஸாகின.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் பல படங்கள் ஓடிடியில் ரிலிஸ் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்கள் ரிலீஸாகின. அந்த வரிசையில் மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா என்ற படமும் தயாராக இருப்பதால் ஓடிடியில் ரிலிஸ் செய்யும் முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.

 அந்த படத்தை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8 ஆம் தேதி ரிலிஸாகவுள்ள இப்படம்  மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக். 

தற்போது இதன் தமிழ் ரீமேக்கில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.  ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.

  • Share on

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா” அசுரன், தேன் திரைப்படங்கள் தேர்வு..!

10 கோடி சம்பளம் மயங்காத பிரபல நடிகை

  • Share on