பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டு வாரத்திற்குள் வெளியேறிவிட்டார். இந்த நிலையில் மீண்டும் இவர் நிகழ்ச்சிக்கு வருவாரா? என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது அதைப்பற்றி அவரே கருத்து கூறியிருக்கிறார்.
வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஜிபி முத்து கலந்து கொள்வாரா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஜிபி முத்துவின் பதில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ரசிகர்கள் அதிகமானோர் ஆர்வத்தோடு எதிர்பார்த்த போட்டியாளரான ஜி பி முத்து ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு இவர் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜி பி முத்து மீண்டும் நிகழ்ச்சிக்கு வருவாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். தற்போது அது பற்றி அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில் பிக்பாஸில் இருந்து எந்த ஒரு அழைப்பும் தனக்கு வரவில்லை. அப்படி வந்தால் தான் யோசித்து முடிவெடுப்பதாக கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே தன்னுடைய மகனை மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்து விட்டு தான் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேர்ந்திருந்தாராம். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருக்கும்போது மகனுடைய நினைவாகவே இருந்தது என்று கூறியிருக்கிறார். அதுபோல வெளியே வந்த பிறகு மனைவி மற்றும் குழந்தைகள் எல்லாம் ஏன் வந்தீர்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் என்று கூறி வந்தாலும் ,அவருடைய மகன் விஷ்ணு மட்டும் அப்பா உங்களை ரொம்ப தேடினேன் என்று கூறினாராம். அதனால் இனி வருவது யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் தற்போது விஷ்ணுவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மருத்துவமனையில் கூறிவிட்டார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதிகமாக ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஒரே காரணத்தினால் ஜி பி முத்துவிற்கு முதல் ஆளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைத்தளத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் மூலமாக தன்னுடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் ஆக்சன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்துக் கொண்ட ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடியின் மூலமாக இரண்டு வாரங்கள் விறுவிறுப்பாக வைத்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ஜி பி முத்து பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்காகவே நாங்கள் இனி இந்த சீசனை பார்க்க போகிறோம் என்று கூறி வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் முதல் நாளில் கமல் மற்றும் ஜிபி முத்துவின் கலந்துரையாடல் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆதாம் ஏவாள் பற்றி இவர்கள் பேசிய வார்த்தை இப்போ வரைக்கும் பலருடைய மீம்ஸ்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சி யில் இருந்ததற்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது .அது முழுக்க உங்களுக்கு வந்து கிடைத்து விட்டதா என்று பேட்டியில் ஒருவர் கேட்டதற்கு சம்பளமா? அப்படின்னா என்னது? அது எனக்கு தெரியவே செய்யாது? பிக் பாஸ் சம்பளத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதை பற்றி எல்லாம் என் தம்பிக்கு தான் தெரியும். அவன்தான் அதை எல்லாம் பார்த்துக்கொள்வது என்று வெள்ளந்தி தனமாக கூறியிருக்கிறார் .இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர் .ஆதாம் தெரியாது என்று கமலை கலாய்த்தது போல பிக்பாஸ் சம்பளமே தெரியாது என்று மீண்டும் ஜி பி முத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டாரே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.