சென்னையில், ராஜவேல் முதலியார் - சுப்பம்மாள் தம்பதிக்கு மகனாக, 1937ல் இதே நாளில் ( அக்டோபர் 21 ) பிறந்தவர் சீனிவாசன். இவரது தந்தை நடிகர்; அவரை பார்த்து, இவரும் நடிகராக விரும்பினார்.
சென்னை, ஐ.சி.எப்.,பில் பணியாற்றிய போது, ரயில்வே, 'டிராமாட்டிக் கிளப்பில் இணைந்தார். 'கலாட்டா கல்யாணம்' என்ற நாடகத்தில் நடிகராக அறிமுகமானார். 'கல் மனம்' நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக நடித்தார். அதைப் பார்த்த நடிகர் கே.ஏ.தங்கவேலு, 'இனி, இவரை தேங்காய் சீனிவாசன் என்று தான் அழைக்க வேண்டும்' என்று பட்டம் சூட்டினார்; பின், அந்தப் பெயரே நிலைத்தது.
இரவும் பகலும் திரைப்படத்தில், அறிமுக நடிகராக ஒப்பந்தமான நிலையில், ஜெய்சங்கருக்காக அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தார். பின், இருவரும் நண்பர்களாகினர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்டோருடன், 900 படங்களில், நகைச்சுவை, துணை நடிகர், வில்லனாக நடித்து பிரபலமானார். உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு - பெங்களூரு சென்ற போது, மூளையில் ஏற்பட்ட பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, ரத்தக்கசிவால் சிகிச்சை 1987 நவம்பர் 9ல்,தன், 50வது வயதில் மறைந்தார். தயாரிப்பாளராக தோற்று, நடிகராக வெற்றி பெற்றவரின் பிறந்த தினம் இன்று !