இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது.
சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாதி ரொம்ப எபிக் ஆக இருக்கு, வந்தியத்தேவனாக கார்த்தியின் நடிப்பு அற்புதம். இடைவேளைக்கு முன்பாக சியான் விக்ரமின் நடிப்பு மிரட்டல்,
பொன்னியின் செல்வன் டைட்டில் அருள்மொழி வர்மனுக்கானது என்றாலும், கதையின் நாயகன் வல்லவராயன் வந்தியத்தேவன் தான். முதல் பாதி முழுக்கவே கார்த்தி வந்தியத்தேவனாக புகுந்து விளையாடுகிறார் என படம் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.