இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு, தனுஷ் நடித்த அசுரன் மற்றும் தேன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.
51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட, இன்னும் வெளியாகாத தேன் என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விழாவில் திரையிட்டு காட்டப்பட உள்ளன.