• vilasalnews@gmail.com

திருவள்ளுவர் சிலையை அப்படி திரும்பி நின்னு பார்க்கிறது யாரு தெரியுமா..

  • Share on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தான் இப்படி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன் நின்று கொண்டு அப்படியொரு போஸ் கொடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து வரும் இவரது லைன் அப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவரது புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் உள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலைக்கு அருகே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் முகத்தைக் காட்டாமல் திரும்பி நிற்கும் படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை 3 மணி நேரத்தில் அள்ளி உள்ளார்.

நடிப்பின் நாயகன் என அழைக்கப்படும் நடிகர் சூர்யா தான் திருவள்ளுவர் சிலையின் உயரத்தையும் அழகையும் ரசித்துப் பார்த்தபடி போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமர் மற்றும் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கே சூர்யாவுக்கான வீடு செட் சமீபத்தில் அமைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தன.

முதல்முறையாக கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண்கிறேன் என்பதை குறிப்பிடுவதை போல ஃபர்ஸ்ட் டைம் என நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். திருவள்ளுவர் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள நிலையில், சூர்யா 41 படத்தில் வள்ளுவருக்கு ஏதாவது முக்கியத்துவம் உள்ளதா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு நடிகர் சூர்யா வெறும் 25 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அத்தனை விரிவாக இயக்குநர் பாலா இந்த படத்தை முடிக்க பக்காவாக பிளான் போட்டு வேலை பார்த்து வருகிறாராம். அவருக்கு உதவியாக இயக்குநர் சுதா கொங்கரா இந்த படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போதி தர்மனாக நடித்து அசத்திய நடிகர் சூர்யா திருவள்ளுவராகவும் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கோரிக்கை வைத்து வருகின்றனர். வள்ளுவர் வரலாற்றில் நடிக்க நடிகர் சூர்யா கச்சிதமாக பொருந்துவார் என்றும் உலக பொதுமறையான திருக்குறளை உலகத்திற்கே தந்தவரின் வாழ்க்கை வரலாறு புனைவு படமாக உருவானால் வேற லெவலில் இருக்கும் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

  • Share on

தி காஷ்மீர் பைல்ஸ் படம் ரூ.100 கோடி வசூல்

வெளியானது அஜித்தின் ஏகே 61 டைட்டில் "துணிவு"

  • Share on