• vilasalnews@gmail.com

தி காஷ்மீர் பைல்ஸ் படம் ரூ.100 கோடி வசூல்

  • Share on
அரசியல் ரீதியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம், வசூலில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. திரையிடப்பட்ட எட்டு நாட்களில், 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.

காஷ்மீரில், 1990களில் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவானது, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம். விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இப்படத்தில், பிரபல நடிகர்கள் அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரையிடப்பட்ட முதல் நாளில், 3.55 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்த இந்தப் படம், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை தொடர்ந்து, மக்களின் கவனத்தை ஈர்த்தது. பா.ஜ., ஆளும் பல மாநிலங்கள், இதற்கு வரி விலக்கு அளித்துள்ளன.இந்நிலையில், திரையிடப்பட்ட எட்டாவது நாளான நேற்று முன்தினம் மட்டும், 19.15 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது, ஒரு நாளில் இந்தப் படம் பெற்ற அதிகபட்ச வசூலாகும்.

இதையடுத்து, 100 கோடி ரூபாய் வசூலித்துள்ள படங்களின் பட்டியலில், இந்தப் படமும் இடம் பெற்றுள்ளது. திரையிடப்பட்ட எட்டாவது நாளில் அதிக வசூல் என்ற சாதனையை, பாகுபலி படம் பெற்றுள்ளது. அது, 19.75 கோடி ரூபாய் வசூலித்தது. இதுவரை, 630 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்தப் படம், இந்த வாரத்தில், 4,000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. 

மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளத்திலும், 'டப்பிங்' செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த வாரத்திலேயே, 150 கோடி ரூபாய் வசூலை, இந்தப் படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Share on

வெளியானது " அஜித்தின் " வலிமை திரையரங்குகளில் வெளியாகும் தேதி

திருவள்ளுவர் சிலையை அப்படி திரும்பி நின்னு பார்க்கிறது யாரு தெரியுமா..

  • Share on