பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண தேதியை முடிவு செய்யவிருந்தனர். பின்னர், ஜனவரியில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா
ஷுட்டிங் முடித்து விட்டு நேராக ஓட்டலுக்கு வந்துள்ளார் சித்ரா. அவருடன் அவர் திருமணம் செய்ய இருக்கும் ஹேமந்த்தும் வந்திருந்தார். இருவருக்கும் சண்டை எதுவும் நடந்ததா இல்லை, வேறு ஏதும் பிரச்னையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சித்ராவின் கன்னத்தில் காயமும் உள்ளது. அதுப்பற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேமந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சித்ராவின் இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.