ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், வலிமை திரைப்படம் பிப்.24ம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, கன்னட மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது என்று அறிவித்துள்ளார்.
அஜித்தின் வலிமை படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #ValimaiFromFeb24 என்ற ஹாஷ்டேக்கை ட்ரண்ட் செய்தும் வருகிறார்கள்.