சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் ஆதரவால் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ‘ஜெய்பீம்’ படம் ஏற்கனவே ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோஸ்க்கும் சிறந்த திரைப்படத்துக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து படக்குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.