கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் படக்குழு தற்போது அதை உறுதி செய்துள்ளது. அதன்படி, 'மகான்' நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.