தேன்நிலவுக்கு இவ்வளவு தொகை செலவா, என சமீபத்தில் திருமணம் செய்து மாலத்தீவுக்கு தேன்நிலவு சென்ற நடிகையின் செலவு தொகையை கண்டு சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமான காஜல் அகர்வால் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தற்போது இருந்து வருகிறார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 30 ம் தேதி அவருடன் திருமணம் நடந்தது.
கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டில் குடியேறிய காஜல், கொரோனா அச்சுறுத்தல்களால் தேனிலவை தள்ளி வைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடியுள்ளார்.
கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் மீன்களை ரசித்துப் பார்க்கும் புகைப்படத்தையும் பகிர்ந்ததால் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது.
காஜல் அகர்வாலின் தேனிலவு செலவுத்தொகை சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.நான்கு நாட்கள் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடியதாகவும் அதற்கு மொத்தம் ரூபாய் 40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் தேனிலவுக்கு இவ்வளவு செலவா என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.