• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் பிரமாண்டமான பேனர்

  • Share on

தூத்துக்குடியில் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தை முன்னிட்டு தல ரசிகர் மன்றம் சார்பாக பிரமாண்டமான பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் போன்றவற்றை ஒட்ட துவங்கிவிட்டனர்.

அந்த வகையில், தற்போது வலிமை படம் வெற்றி பெற தூத்துக்குடி தல ரசிகர் மன்றம் சார்பாக வ உ சி கல்லூரி அருகில் வலிமை பட பேனர் பிரம்மாண்டமாய் வைத்துள்ளனர்..

இதனால் தூத்துக்குடி தல ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

  • Share on

பக்தி பாடலுக்கு கவர்ச்சி நடனம்: சன்னி லியோனுக்கு எதிர்ப்பு!

ஓடிடி ரிலீசாகும் 'மகான்' : பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது!

  • Share on