மதுரா-பக்தி பாடலுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடிய நடிகை சன்னி லியோனுக்கு, மதுராவைச் சேர்ந்த பூசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 1960ல் வெளியான பாலிவுட் திரைப்படமான கோஹினுார் படத்தில் 'மதுபன் மேன் ராதிகா நாச்சே' என்ற பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. பாடகர் முகமது ரபியால் பாடப்பட்ட அந்த பாடல், கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு இடையில் உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் 'மதுபன்' என்ற தலைப்பின்கீழ் இதே பாடலை 'ரீமிக்ஸ்' போல் மாற்றியமைத்து வீடியோவாக வெளியிட்டது. பாடகர்கள் கணிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்கரபர்த்தி ஆகியோர் பாடி உள்ள
இந்த பாடலில், பிரபல நடிகை சன்னி லியோன் ஆடி உள்ளார். பக்தி பாடலாக கருதப்படும் இதில் மிகவும் கவர்ச்சியாக சன்னி லியோன் ஆடியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.பாடல் முழுதும் ஆபாசமாக நடனமாடுவது போல் எடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சன்னி லியோன் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த பாடலுக்கு தடை விதிக்கக்கோரியும், உத்தர பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த பூசாரிகள், நேற்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.