• vilasalnews@gmail.com

அம்மன் கெட்டபில் தமன்னா : வைரலாகும் புகைப்படம்!

  • Share on

தலைவாழை இலையில் அம்மன் வேடமிட்டு நடிகை தமன்னா உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்து உள்ளனர் என்பதும் கேஆர் விஜயா முதல் நயன்தாரா வரை அம்மன் வேடத்தில் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மன் வேடத்தில் தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை நான் கடவுளாகவே உணர்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமன்னா அம்மன் படத்தில் நடிக்கிறாரா? அல்லது ஏதாவது விளம்பர படமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • Share on

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'' - மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இளையராஜா இசையில் கவனம் ஈர்க்கும் "மாயோனே மணிவண்ணா... " பாடல்!

  • Share on