• vilasalnews@gmail.com

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'' - மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

  • Share on

எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்' என  'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

'மாநாடு' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார். பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததே அதற்கு காரணம். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி 11 மணி மணியளவில் படம் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனாலும், அதிகாலை வரை தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. அதனால் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப்பெறாததால் 5 மணிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணியில் இருந்து திரையிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இதுகுறித்து 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் '' எல்லாம் சரியாக இருக்கிறது. ரசிகர்கள் சந்திக்கும் இடையூறுகளுக்கு மன்னிக்கவும். இப்போது இது எங்கள் நேரம். கடவுள் பெரியவர். எனக்காக நின்ற அனைவருக்கும் நன்றி. எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'' என்று குறிப்பிட்டுள்ளார்


  • Share on

ராஜுவை சீண்டிப்பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!

அம்மன் கெட்டபில் தமன்னா : வைரலாகும் புகைப்படம்!

  • Share on