• vilasalnews@gmail.com

சைக்கிளிங் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு!

  • Share on

சென்னையில் சைக்கிளிங் சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து கீழே தள்ளி, அவரது செல்போனை பறித்துச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக் தற்போது, புதிய படங்களில் நடித்து வருகிறார்.

தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வது வழக்கம் அது போல இன்று அதிகாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அவரை கும்பல் ஒன்று வழி மறித்துள்ளது. பின்னர், சைக்கிளில் இருந்து கவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி கையிலிருந்த சாம்சங் செல்போனைப் பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பி விட்டது.

தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில், வழிபறி கொள்ளையர்கள் கீழே தள்ளி தாக்கியதில் லேசான காயமடைந்த கவுதம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினார்.

  • Share on

பஜாஜ் ஆயிலாக மாறிய பஜ்ஜி ஆயில்: நிஜமானது விவேக் காமெடி!

மாஸ்டர் படத்தை 1,000 திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டம்

  • Share on