போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்கும் காவல் ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் எதிர்பாராத விதமாக கொலை வழக்கில் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அதன் பின்னணியில் சாதியப் பிரச்னை தலை தூக்குகிறது. தான் ஒரு குற்றமற்றவர் என்பதை அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதே ருத்ர தாண்டவம் படத்தின் கதை.
போதைப்பொருள் கடத்தல், அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவற்றின் தலைவனாக வரும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கும், அதைத் தடுக்க நினைக்கும் காவல் ஆய்வாளர் ரிச்சார்டுக்குமான மோதல் திரைக்கதையாக நகர்கிறது.
வலது சாரி சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்க முடியும் என்ற கருத்து ஒரு தரப்பினர் முன் வைத்தாலும்,
போதைப் பொருள் மாஃபியா மூலம் இளைஞர்கள் எப்படி சீரழிகின் றனர் என்பதை படமாக்கிய விதத்திற்காக இயக்குநர் மோகன் ஜிக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்கும் என்றும் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் காப்பகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர் தெரிவித்துள்ளார் என்ற மற்றொரு பாராட்டு கருத்துக்களும் வரத்தான் செய்கிறது.
திரௌபதி படம் மூலம் கவனத்தை ஈர்த்த மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்த படமான ருத்ரதாண்டவம், படம் வெளியீட்டிற்கு முன்பே ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். ஆனால், படத்தில் பரபரப்பான, சர்ச்சையான விஷயங்கள் எதுவுமில்லை. அதே சமயம் நாட்டில் நடக்கும் மதமாற்றம், சாதிய பிரச்சினை ஆகியவற்றை வைத்து நடக்கும் சில அத்துமீறல்களைப் பற்றி துணிச்சலாகக் கொடுத்திருக்கிறார். அவை நியாயமான கருத்துக்களாகவே படத்தில் இடம் பெற்றுள்ளன என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.