நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் சுமார் 5 வருடங்கள் கழிந்து இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இது வரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே தெரிந்தது. அதே போல் எப்போதும் இதமான காதல் கதைகளையே இயக்கிய கெளதம் மேனன், இந்த முறை யாரும் எதிர்பார்க் காத ஒரு படைப்பை கொடுக்க தயாராகி விட்டார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி யதாக கூறப்படுகிறது. இப்பாத்தில் சிம்புக்கு ஜோடியாக காயடுலோஹர் என்பவர் இணைய உள்ளார். எனவே சிம்புவின் காதல் காட்சிகள், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் எடுக்க படலாம் என கூறப்பட்டது. அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.
இரண்டாவது லுக்கில் சிம்பு, வேலை செய்து விட்டு... களைப்பில் இருப்பது போலவும், படுக்க கூட இடம் இல்லாத ஒரு அறையில் பலர் படுத்திருப்பது போலவும், சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருப்பது போலவும் உள்ளது. இது சிம்புவின் ரசிகர்களையே பரிதாப படவைத்துள்ளது. தற்போது இந்த செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில், ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.