இந்தாண்டு ஜூன் வரை அதிகம் பகிரப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் அஜித்தின் வலிமை முதலிடம் பெற்றுள்ளது.
நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வலிமை படத்தின் முதல் தோற்ற வீடியோ, முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அதிகம் பகிரப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் #valimai முதலிடம் பெற்றுள்ளது. #master ஹேஷ்டேக்குக்கு 2-ம் இடமும் #ajithkumar #thalapathy65 ஆகிய ஹேஷ்டேக்குக ளுக்கு முறையே 4-ம், 5-ம் இடமும் கிடைத்துள்ளன.
இந்த தகவலை ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.