கடந்த ஜூலை 12-ஆம் தேதி சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இதனையடுத்து அவர், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், மகன் நெற்றியில் அன்பு முத்தமிடும் புகைப்படத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், “எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக நுழைந்த சிவகார்த்திக்கேயன், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருகிறார். உறவுக்கார பெண் ஆர்த்தியை சிறுவயது முதற்கொண்டே காதலித்து வந்த சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு அவரையே மணந்துகொண்டார்.