பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என்ற இரு முக்கியக் கதாபாத்திரங்களில் அவர் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படம் அடுத்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கியது.
இந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியாகியுள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரம்மாண்ட படகு ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் பெரும்பாலான காட்சிகளில் கடலில் நடப்பவை. எனவே படகில் செல்லும் காட்சிகள் படமாக்கப் பட்டு வருவதாகத் தெரிகிறது. மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அந்தப் படகின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயார்க்கின்றனர். ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார்.