• vilasalnews@gmail.com

நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு...!

  • Share on

நடிகை யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பரிச்சயமான இவர் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது மட்டுமல்லாமல் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28)  என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள யாஷிகா ஆனந்த், மிகவும் கிரிட்டிக்கல் கன்டிஷனில் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து குறித்து தகவல் கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் யாஷிகா ஆனந்த் மீது அதிக வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன? எதற்காக யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்தார்? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதுவரை வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தம்பியுடன் சூர்யா எடுத்த முதல் செல்பி.. நடிகர் கார்த்தி வெளியிட்ட புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

  • Share on