தம்பியுடன் சூர்யா எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதுமட்டுமல் லாமல் வாடிவாசல் உட்பட பல திரைப்படங்கள் வரிசையாக உருவாக உள்ளன.
நேற்று நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியதால் பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தனர். நடிகர் கார்த்தி சூர்யா நடித்த படங்கள் மற்றும் அவர் அளித்த பேட்டியில் இருந்த காட்சிகளை எடுத்து மாஷப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவை தொடர்ந்து சூர்யா தன்னுடன் வெளிநாட்டில் முதல் முறையாக எடுத்த செல்பி புகைப் படத்தை கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனக்கு முன்னோடியாக இருக்கும் சூர்யாவிற்கு பிறந்தநாள் என கூறியுள்ளார்.