இரண்டு முறை விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
அதன்பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் விஜய் டிவியின் பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி, பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வனிதா, தற்போது பல்வேறு படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே வனிதாவும், பவர் ஸ்டாரும் திருமண செய்துகொண்டது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து வனிதா 4 ஆவது திருமணம் செய்துகொண்டாரா என விமர்சனங்களும் ஒருபக்கம் எழுந்தன. ஆனால் ஒருசிலரோ இது படத்துக்கான புரோமோஷனாக இருக்கலாம் என கருத்துக்களை தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில் பவர்ஸ்டார், வனிதாவுக்கு திருமணம் என உலாவிய செய்திக்கு விடை கிடைத்தது. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இயக்கும் பிக்கப் டிராப் படத்தில் அவருக்கு, ஜோடியாக வனிதா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போட்டோக்கள்தான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின.